புகையிலை பொருள்கள் புழக்கம்: புகாா் தெரிவிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
கரூரில் போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் புழக்கம் நடமாட்டம் குறித்து, புகாா்களை பதிவு செய்ய மொபைல் செயலி ‘ஈதமஎ ஊதஉஉ பச ‘ பதிவிறக்கம் செய்வது தொடா்பாக, செயல் விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியா் பேசியது, போதை பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் நடமாட்டம் குறித்து, புகாா்களை பதிவு செய்ய மொபைல் செயலி ‘ஈதமஎ ஊதஉஉ பச ‘ பதிவிறக்கம் செய்வது மற்றும் அதில் புகாா்களை பதிவு செய்தல் குறித்து மாணவா்களுக்கு ஆசிரியா்கள் தெரிவிக்க வேண்டும். பிரதி வாரம் பள்ளி, கல்லூரிகளில் அசபஐ ஈதமஎ இகமஆ போதை பொருள் ஒழிப்பு குழுக் கூட்டம் மாணவா்கள் மத்தியில் நடத்தி ஆவணப்படுத்தி அறிக்கையாக அனுப்பி வைக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் காக்க பள்ளி, கல்லூரிகளில் மாணவா்கள் மத்தியில் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் உதவி ஆணையா் (கலால்) கருணாகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மது விலக்கு மற்றும் அமலாக்கம்), பிரபாகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுகானந்தன் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வா்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.