செய்திகள் :

புதின்: "ரஷ்யாவை எதிரியாகச் சித்திரிக்கும் திகில் கதைகள்..." - ஐரோப்பிய நாடுகள் மீது விமர்சனம்

post image

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், தான் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஒருபோதும் எதிர்த்ததில்லை எனக் கூறியுள்ளார். அத்துடன் உக்ரைன், ரஷ்யா இரு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு தீர்வை எட்டமுடியும் என்றும் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆயுத மோதல் ரஷ்யா-உக்ரைன் போர். இதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் அலாஸ்காவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Ukraine President Zelensky

இந்த சந்திப்புக்குப் பிறகு, புதின் நீண்ட நாட்கள் நடந்துவரும் போரால் சோர்வுற்றிருப்பதாகவும் விரைவில் தீர்வை எட்டமுடியும் என்றும் ட்ரம்ப் கூறினார்.

ஆனால் உக்ரைன், பிரான்ஸ் உட்பட பிற ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா அமைதி உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ளும் என்பதை நம்பவில்லை. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் போரை வென்றால், தொடர்ந்து நேட்டோ உறுப்பினர்களாக இருக்கக் கூடுய ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும் என்று தெரிவிக்கின்றனர்.

அலாஸ்காவில் ட்ரம்ப்புடனான சந்திப்புக்குப் பிறகு நீண்டநாட்கள் அமைதிகாத்த புதின் சீனா சுற்றுப்பயணத்தின்போது ஐரோப்பிய நாடுகளின் கருத்தை எதிர்த்துள்ளார்.

ட்ரம்ப் - புதின்
ட்ரம்ப் - புதின் அலாஸ்கா சந்திப்பு

ரஷ்யாவை எதிரியாக சித்திரிக்க முயலும் திறமையற்றவர்களால் தூண்டப்பட்ட "திகில் கதைகள்" என அவற்றை மறுத்துள்ளார். மேலும், மேற்கத்திய நாடுகள் நேட்டோவின் உதவியுடன் சோவியத்துக்குப் பிறகு அதன் நிலப்பரப்புகளை உள்வாங்க எண்ணியதனால் உக்ரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

"உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய தகுதியிருக்கிறது. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் நேட்டோ என்பது வேறுவிஷயம்..." என ஸ்லோவாக் பிரதமர் ராபர்ட் ஃபிகோவிடம் பேசியபோது தெரிவித்திருக்கிறார்.

மேலும் உக்ரைன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போரை முடிவுக்குக் கொண்டடுவர சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

இந்த விஷயத்தின் உக்ரைன் யாருடன் இணைய முடியும், யாருடன் இணைய முடியாது என்பதை ரஷ்யா கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது உக்ரைன். மேலும், தங்கள் நிலப்பரப்புகளை விட்டுக்கொடுக்கும் எந்தவொரு தீர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார் ஜெலன்ஸ்கி.

ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்.22 முதல் அமல் - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம... மேலும் பார்க்க

NDA: `தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்!' - டிடிவி தினகரன் அறிவிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக்க... மேலும் பார்க்க

Manipur செல்லும் MODI | GST Council : எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? | Imperfect Show 3.9.2025

* மணிப்பூர் செல்லும் மோடி... எப்போது?* பிரதமர் பயணம்: காலம் தாழ்ந்த செயல்?* என் தாயை அவமதித்தவர்களை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - மோடி?* பேரணியின்போது போலீசாரால் பைக்கை இழந்தவருக்கு புதிய பைக் ... மேலும் பார்க்க

"அன்புமணிக்கு கெடு விதிப்பு; செப் 10-ம் தேதிக்குள் பதில் அளிக்காவிட்டால்..." - ராமதாஸ் எச்சரிக்கை

பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையேயான மோதல் போக்கு முடிவுறாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நட... மேலும் பார்க்க

சீனா: ஒன்றுகூடிய புதின், கிம், ஜின் பிங் - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அ... மேலும் பார்க்க

70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை - இருள் நீங்க போராடும் ஆனைமலை பழங்குடி மக்கள்!

கோவை மாவட்டம், ஆனைமலையை சுற்றி 38 கிராமங்கள் உள்ளன. அதில் நெடுங்குன்றம் என்கிற ஒரு கிராமத்தை தவிர மற்ற கிராமங்களில் மின்சார வசதி இல்லை. இவர்கள் பலரும் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு, அப்பர் ஆழியார் ... மேலும் பார்க்க