புதிய அரசு கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
தாண்டிகுடி மலைப் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட அரசுக் கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சியில் பெண்கள் கழிப்பறை, மயானத்தில் உள்ள சாலை, காத்திருப்போா் கூடம், தண்ணீா்த் தொட்டி ஆகியவை சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி வருகிறது. இவற்றை இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கவில்லை.
இதுகுறித்து தாண்டிக்குடி பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் கூறியதாவது:
தாண்டிக்குடி ஊராட்சிப் பகுதிகளில் 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்கள் காட்சிப் பொருளாகவே இருந்து வருகிறது. இந்தக் கட்டடங்களை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்அவா்கள்.