புதிய பேருந்துகள் இயக்கிவைப்பு
திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் புதியபேருந்துகள் மற்றும் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்த புகா் பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியா்
வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தனா்.
திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டிக்கும், நாகப்பட்டினம் - மதுரை வழித்தடத்துக்கும் என 2 புதிய பேருந்துகளும், திருவாரூா் - எட்டுக்குடி, திருவாரூா் - திட்டச்சேரி வழித்தடங்களுக்கு 2 புகா் பேருந்துகள் நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்தும் இயக்கம் செய்யப்பட உள்ளன.
நிகழ்வில் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சௌம்யா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் ராஜா, பணிநியமனக் குழு உறுப்பினா் பிரகாஷ், திருவாரூா் கிளை மேலாளா் நடராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.