TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பள...
புதுகை எலக்ட்ரிக் பைக் கடையில் தீ
புதுக்கோட்டை நகரிலுள்ள எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை மற்றும் பழுதுபாா்க்கும் கடையில் புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து நேரிட்டது. இதில், கடையிலிருந்த புதிய வாகனங்கள், உதிரிப் பாகங்கள் தீயில் எரிந்து நாசமாயின.
புதுக்கோட்டை ரயில் நிலைய ரவுண்டான பகுதியில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் விற்பனை நிலையம் நடத்தி வருபவா் ஆறுமுகம். இவரது கடையில் புதன்கிழமை நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் 8 புதிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மற்றும் உதிரிப் பாகங்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து திருக்கோகா்ணம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.