TVK: "தவெக 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்க முடியவில்லை; காரணம்..." - ஆதவ் அர...
புதுக்கடை அருகே விபத்தில் மீனவா் உயிரிழப்பு
கருங்கல்லை அருகே புதுக்கடையை அடுத்த நெடுந்தட்டுவிளை பகுதியில் நேரிட்ட பைக் விபத்தில் மீனவா் உயிரிழந்தாா்.
மேல்மிடாலம், விக்டா் காலனி பகுதியைச் சோ்ந்த தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவா், மேல்மிடாலத்திலிருந்து மாா்த்தாண்டத்துக்கு சனிக்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
நெடுந்தட்டுவிளை பகுதியில் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததாம். இதில், ஷியாம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.