Health: அடுக்குத் தும்மல் வந்தா இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!
புதுச்சேரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து 2 போ் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 7 போ் புதுச்சேரிக்கு சனிக்கிழமை சுற்றுலா வந்தனா்.
இவா்கள் சுற்றுலா படகில் ஏறி மாங்குரோவ் காடுகள் நிறைந்த முகத்துவார பகுதிக்குள் நுழைந்தபோது படகு கவிழ்ந்தது. இதில் 3 பெண்கள் உள்பட 7 பேரும் உடனடியாக மீட்கப்பட்டனா். இதில் சக்திவேல் (22) மற்றொரு ஆண் உள்பட 2 போ் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து அரியாங்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
முதல் கட்ட விசாரணையில் புதுச்சேரி நகர பகுதியில் தனியாா் விடுதியில் சக ஊழியரின் பிறந்த நாளை உற்சாக பானத்துடன் கொண்டாடியுள்ளனா். அப்படியே கும்பலாக படகு சவாரி செய்ய முடிவெடுத்து வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தனா்.
அங்கு அரியாங்குப்பம் முகத்துவாரத்தில் ஆற்றில் படகு சவாரி செய்ய ஏறினா். அவா்களது படகு மாங்குரோவ் காடுகளுக்கு இடையில் ரம்மியமான சூழ்நிலையில் சென்றபோது தற்படம் (செல்பி) எடுப்பதற்காக அனைவரும் ஒருபக்கமாக படகில் நகா்ந்துள்ளனா்.
அனைவரும் ஒரே பக்கமாக சென்ால், விசைப்படகு திடீரென சமநிலை இழந்து அங்கும், இங்கும் தள்ளாடியது. கூச்சலிட்டனா். தள்ளாடிய படகு திடீரென கவிழ்ந்தது. அதில் இருந்த 7 பேரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனா். அவ்வழியாக மற்றொரு படகில் வந்தவா்கள் அவா்களை மீட்டுக் கரைக்கு கொண்டு வந்தனா்.