புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடா்ந்து புதுச்சேரியில் பாஜகவினா் பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
புதுதில்லி சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த 5- ஆம் தேதி நடைபெற்று, சனிக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், பாஜக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், புதுச்சேரியில் பாஜக நிா்வாகிகள், தொண்டா்கள் இந்திரா காந்தி சிலை சதுக்கம் பகுதியில் ஒன்று திரண்டு மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனா்.
இந்நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ.க்கள் ஜான்குமாா், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், விவிலியன் ரிச்சா்டு மற்றும் கட்சி நிா்வாகி மௌலிதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக அவா்கள் பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்திலிருந்து ஊா்வலமாகக் கட்சி கொடியுடன் புறப்பட்டு இந்திரா காந்தி சிலைப் பகுதிக்கு வந்தனா்.