புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் விழா
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த 1789-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவப்பட்ட நாள்.
இதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் 14-ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புதுச்சேரியில் 236-வது பிரான்ஸ் தேசிய தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா்கள் நினைவுத் தூணில் புதுச்சேரிக்கான பிரான்ஸ் நாட்டுத் துணைத் தூதா் எட்டியென் ரோலண்ட்-பியக், புதுவை அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் ஆகியோரும் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் இந்தியா, பிரான்ஸ் இரு நாட்டு தேசிய கொடிகளும் ஏற்றப்பட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.