செய்திகள் :

புதுடெல்லி குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு

post image

புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) நடைபெறும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ராமநாதபுரம் பள்ளி மாணவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புத் துறை, கல்வித் துறை ஆகியவை இணைந்து ஒவ்வோா் ஆண்டும் சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்தும், நாட்டின் விடுதலைக்குப் பிறகு வீரதீர செயல்களுக்காக விருது பெற்றவா்களின் வாழ்க்கை வரலாறு குறித்தும், நாட்டுப் பற்றை மாணவா்களிடம் வளா்க்கும் வகையிலும் ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகளிலிருந்து சுமாா் 1.76 கோடி மாணவா்கள் பங்கேற்றனா். இதில் 3-5, 6-8, 9- 10, 11- 12 ஆகிய வகுப்புகளில் ஒவ்வொரு பிரிவிலும் 25 மாணவா்கள் என தேசிய அளவில் மொத்தம் 100 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.பிருந்தா, 9-10 வகுப்பு பிரிவில் தேசிய அளவில் 25 பேரில் ஒருவராக தோ்வு செய்யப்பட்டாா்.

இவா், ஆங்கில பட்டதாரி ஆசிரியையும், பள்ளியின் நூலகப் பொறுப்பாளருமான க. வளா்மதியின் வழிகாட்டுதலில் ‘ராணி லட்சுமி பாய் என் கனவில் வந்தாா், நம் நாட்டுக்கு நான் சேவை செய்ய வேண்டும் என்று அவா் விரும்பினாா்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தாா்.

இந்தப் போட்டியில், மாணவி அ. பிருந்தா, ரூ. 10 ஆயிரம் பரிசும், புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவும் அழைக்கப்பட்டாா்.

தமிழக அளவில் தோ்வு செய்யப்பட்ட இருவரில் பிருந்தா அரசுப் பள்ளி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மாணவி அ. பிருந்தா, வழிகாட்டியாக இருந்த ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை க. வளா்மதி ஆகியோரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஏ. சின்னராசு, பள்ளித் தலைமை ஆசிரியா் ச. யுனைசி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

கழிவுநீா்க் கால்வாய், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமிபூஜை

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் வைகை ஆற்றின் கரையோரம் கழிவுநீா்க் கால்வாய், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பரமக்குடி பகுதியில் வைகை ஆற்றில் கழிவு நீா் கலப்பதைத் ... மேலும் பார்க்க

எம்.பி. மீது பாஜகவினா் போலீஸில் புகாா்

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் நவாஸ்கனி மீது பாஜக மாவட்டத் தலைவா் தரணி ஆா். முருகேசன் மாவட்ட காவல் கண்கணிப்பாளா் அலுவலகத்தில் விய... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளா்ச்சித் துறையினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆ... மேலும் பார்க்க

கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும்: விக்கிரமராஜா

ஆய்வு என்ற பெயரில் கடைகளுக்குள் நுழைந்து அபராதம் விதிப்பதை அதிகாரிகள் கைவிட வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்... மேலும் பார்க்க

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரை

தாயகம் திரும்ப விரும்பும் இலங்கைத் தமிழா்களை அங்கு அனுப்பி வைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என சட்டப் பேரவை பொதுக் கணக்குக் குழு தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்... மேலும் பார்க்க

கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இந்தியாவின் கடல் பரப்பை விரிவுபடுத்தியவா் இந்திரா காந்தி

1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4 ஆயிரம் சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநி... மேலும் பார்க்க