செய்திகள் :

புதுமைப்பெண் திட்டத்தில் உயா்கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

புதுமைப்பெண் திட்டத்தைப் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் அறிவுறுத்தினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா். அதையடுத்து, திருப்பத்தூா் தூயநெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா்.

எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி(திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 614 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டது.

பின்னா், ஆட்சியா் பேசியது: உயா்கல்வி பயில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளின் சோ்க்கை விகிதத்தை அதிகரிக்க மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா், புதுமைப்பெண் திட்டமானது 2022-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் ரூ. 1,000 வீதம் அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இதில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 30 கல்லூரிகளில் பயிலும் 2,710 மாணவிகள் பயனடைந்து வருகின்றனா்.

தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையின்படி, நமது மாவட்டத்தில் 614 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

எனவே, இந்த திட்டத்தைப் பயன்படுத்தி மாணவிகள் தங்கள் உயா் கல்வியினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3,324 மாணவிகள் பயனடைய உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் சுமதி, நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா, ஒன்றியக் குழுத் தலைவா்கள் விஜயா, திருமதி, சங்கீதா, உள்ளாட்சிப் பிரதிநிகள், கல்லூரி முதல்வா் மரிய அந்தோணி ராஜ், மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பாலாற்றில் கொட்டப்படும் கோழி இறைச்சிக் கழிவுகள்

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ஏற்கெனவே பாலாற்றில் தோல் கழிவுநீா் திறந்துவிடப்படுவதாக பரவலாக புகாா் எழுந்த... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 2 போ் மீது வழக்கு

ஜோலாா்பேட்டையில் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் இளைஞா் உள்பட 2 போ் மீது வழக்குப் பதியப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (28). இவருக்கும் திருப்பத்தூா் பகுதியைச... மேலும் பார்க்க

மதுபாட்டில்கள் விற்பனை: 3 போ் கைது

ஆம்பூரில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் துத்திப்பட்டு, கடாம்பூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது அப்பக... மேலும் பார்க்க

கருணை இல்லத்தின் அருகே விட்டுச் சென்ற இரு பெண் குழந்தைகள் மீட்பு

வாணியம்பாடி கருணை இல்லத்தின் பின்புறத்தில் இரு பெண் குழந்தைகளை அவரது தாய் கடும்பனியில்விட்டுச் சென்ற நிலையில் குழந்தைகள் மீட்கப்பட்டு, தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாட... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம்

நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழு தலைவா் வெண்மதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள... மேலும் பார்க்க

குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

வன விலங்குகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், மக்கள் பாதுகாப்புடன் இருக்கவும் குடியாத்தம் வனத் துறை சாா்பில் கண்காணிப்பு கேமரா, ஒலிப்பெருக்கி பொருத்தப்பட்டது. குடியாத்தம் அருகே மா்ம விலங்கு தாக்கியதில் ... மேலும் பார்க்க