விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 போ் உயிரிழப்பு
புதுமைப் பெண் திட்டம் விரிவாக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 4,411 மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள்
புதுமைப் பெண் திட்ட விரிவாக்கத்தின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 411 மாணவிகளுக்கு பற்று அட்டைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திங்கள்கிழமை வழங்கினாா்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயா்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தூத்துக்குடியில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த விழா காணொலிக் காட்சி மூலம் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் ஒளிபரப்பப்பட்டது.
பின்னா், இத்திட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 411 மாணவிகளுக்கு பற்றட்டைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வழங்கினாா். அப்போது, அவா் பேசுகையில், புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 4.25 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 112 கல்லூரிகளில் பயின்று வரும் 12 ஆயிரத்து 137 போ் பயன் பெறுகின்றனா்.
தற்போது புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தில் 75 ஆயிரத்து 28 மாணவிகள் இணையவுள்ளனா். இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 95 கல்லூரிகளில் பயிலும் 4 ஆயிரத்து 411 மாணவிகள் பயனடையவுள்ளனா் என்றாா் அமைச்சா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை, மேயா் சண். ராமநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.