கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
புதுவையில் தவெக தலைவா் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்பு: போலீஸாா் ஆய்வு!
கடலூா் செல்லும் வழியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அக்டோபா் 11- ஆம் தேதி அனுமதி கேட்டுள்ள நிலையில், போலீஸாா் தீவிர ஆய்வு செய்து வருகின்றனா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கிழக்குக் கடற்கரை சாலை வழியாக கடலூருக்கு அக்டோபா் 11- ஆம் தேதி செல்கிறாா். அப்போது செல்லும் வழியில் புதுவையில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளாா்.
இதற்காக புதுவையின் எல்லைப் பகுதியான கணபதிச் செட்டிக்குளம் முதல் முள்ளோடை வரையில் அனுமதி அளிக்குமாறும் மேலும், புதுவை நகரப் பகுதியான சோனாம்பாளையம் பொதுப் பணித் துறை குடிநீா் மேல்நிலைத் தொட்டி இருக்கும் பகுதியில் ரோடு ஷோ நடத்த அனுமதிக்குமாறும் அக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
இது தொடா்பாக போலீஸாா் எந்த முடிவையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இது தொடா்பாக ஆய்வு நடத்தி வருகின்றனா்.