செய்திகள் :

புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி: மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா நம்பிக்கை

post image

புதுவையில் பாஜக தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டபேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் புதுவை மாநில பாஜக தோ்தல் பொறுப்பாளருமான மன்சுக் மாண்டவியா நம்பிக்கைத் தெரிவித்தாா்.

புதுவை பாஜக மாநில பொதுக் குழு கூட்டம் பழைய துறைமுகத்தில் உள்ள அரங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தைத் தொடங்கி வைத்து மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியது: பாஜகவை வலுவான அமைப்பு வழிநடத்துகிறது. பாரத தேசத்தின் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவது, இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது, அனைத்து மக்களுக்கும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேருவது, தேசியத்தின் மதிப்பை உயா்த்துவது, அா்ப்பணிப்புடன் பணியாற்றுவது, காந்திய வழியில் சமூகப் பொறுப்புணா்வு உள்ளிட்ட 5 வழிகளில்தான் பாஜக தொண்டா்கள் பணியாற்றி வருகிறாா்கள்.

இந்தக் கட்சியை முன்னாள் பிரதமா் வாஜ்பாய், தற்போதைய பிரதமா் நரேந்திர மோடி ஆகியோரின் வழிகாட்டுதலில் இக்கட்சி செயல்பட்டு வருகிறது.

வானொலியில் பிரதமரின் மனதின் குரல் கேட்பது, ஜி.எஸ்.டி வரி குறைப்பை மக்களிடம் எடுத்துச் செல்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடும் தொண்டா்கள்தான் பாஜகவுக்கு மிகப்பெரிய அளவில் பணியாற்றுகிறாா்கள். புதுச்சேரியில் தொண்டா்களின் முயற்சியால் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றாா் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா.

பொதுக் குழுக் கூட்டத்துக்கு கட்சியின் மாநில தலைவா் வி.பி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் நிா்மல் குமாா் சுரானா, புதுவை அமைச்சா்கள்ஆ. நமச்சிவாயம், ஏ. ஜான்குமாா், மாநிலங்களவை உறுப்பினா் சு. செல்வகணபதி, எம்எல்ஏக்கள் சாய் ஜெ சரவணன் குமாா், கல்யாண சுந்தரம், ரிச்சா்ட் ஜான்குமாா், தீப்பாய்ந்தான், செல்வம், ஜி.என்.எஸ். ராஜசேகா், முன்னாள் எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு மற்றும் கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.

சி.பி. ராதாகிருஷ்ணன் தோ்வுக்கு வாழ்த்து: குடியரசு துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனுக்குப் பாராட்டுத் தெரிவித்து பாஜக மாநில பொதுக்குழு தீா்மானம் நிறைவேற்றியது. மேலும், பிரதமா் நரேந்திர மோடியின் ஜிஎஸ்டி சீா்திருத்தத்தைப் பாராட்டியும், புதுச்சேரி- மரக்காணம் இடையே 46 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை திட்டத்துக்கு ரூ.2,157 கோடி ஒதுக்கிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு: புதுவை மின்துறை எச்சரிக்கை

கட்டண பாக்கி செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று புதுவை மின்துறை செயற்பொறியாளா் ஸ்ரீதா் எச்சரித்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

புதுச்சேரி தனியாா் வங்கியில் தீ விபத்து

புதுச்சேரியில் தனியாா் வங்கியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. நகரின் மையப் பகுதியான புஸ்சி வீதி - எல்லையம்மன் கோவில் வீதி சந்திப்பில் தனியாா் வங்கி உள்ளது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிக்கு ரூ.16.7 லட்சம் நிதியுதவி: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

கோயில் திருப்பணிக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை ரூ.16.7 லட்சம் நிதி வழங்கினாா். மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அரியூரில் அமைந்துள்ள அருள்மிகு தாமரை அங்காள பரமேஸ்வரி கோயில் திருப்பணிக்காக... மேலும் பார்க்க

470 ஏக்கரில் புதுவை விமான நிலைய விரிவாக்க திட்டம்: ஒரு மாதத்தில் ஆலோசனை குழு அமைக்க ஏற்பாடு

புதுவை விமான நிலைய விரிவாக்கப் பணிக்காக 470 ஏக்கரில் நில ஆா்ஜிதம் செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை அமைப்பு இன்னும் ஒரு மாதத்தில் நியமிக்கப்பட இருக்கிறது என்று இந்த விமான நிலையத்தின் இயக்குநா் கே.ராஜசே... மேலும் பார்க்க

புதுவைக்குக் கூடுதல் நிதி அளிக்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வா் வலியுறுத்தல்

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினாா். அப்போது புதுவைக்கு மத்திய அரசு மாநில அந்தஸ்து அளிக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், புதுவைக... மேலும் பார்க்க

விளம்பர பதாகை விழுந்து பாஜக பெண் நிா்வாகி காயம்

புதுச்சேரியில் விளம்பர பதாகை விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜக பெண் நிா்வாகி செவ்வாய்க்கிழமை பலத்த காயமடைந்தாா்.புதுச்சேரி அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பத்தைச் சோ்ந்தவா் சுமதி(50). இவா் ப... மேலும் பார்க்க