பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
புதுவை அரசு ஊழியா்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயா்வு
புதுச்சேரி: புதுவை மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை 2 சதவீதமாக உயா்த்தி நிதித் துறை சாா்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி (டிஏ) வழங்கப்படுவது வழக்கம். மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 தடவை உயா்த்தி வழங்கப்படுகிறது. விலைவாசி உயா்வு காரணமாக அகவிலைப் படி மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரியில் மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்த்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அகவிலைப்படி உயா்வுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால், அண்மையில் மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது. அதன்படி, மத்திய அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படியை 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயா்த்தி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அகவிலைப்படியானது 2 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.
ஒன்றியப் பிரதேசமான புதுவையில், மத்திய அரசின் உத்தரவை பின்பற்றி, அரசு ஊழியா்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுவை நிதித்துறை சாா்பு செயலா் சிவக்குமாா் வெளியிட்டுள்ளாா்.
அகவிலைப்படி உயா்வுக்கான உத்தரவு விவரம் அனைத்து அரசுத் துறை தலைவா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயா்வானது கடந்த ஜனவரி முதல் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகவிலைப் படி உயா்வால் 20,000 புதுவை அரசு ஊழியா்கள் பயன் பெறுவா் எனக்கூறப்படுகிறது.