வெளிநாடு செல்லும் குழுவிலிருந்து யூசுப் பதான் விலகல்! அபிஷேக் பானர்ஜி சேர்ப்பு!
புதுவை தொழில்நுட்பப் பல்கலை: தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க கோரிக்கை
புதுச்சேரி: புதுவை தொழில்நுட்பப் பல்கலை.யில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் எம்.இசைவாணன் விடுத்துள்ள அறிக்கை:
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு காலதாமதமின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஏற்கெனவே கோரிக்கை வைத்து போராட்டம் நடைபெற்றது. அதன்படி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு போராட்டமும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஓய்வூதியம் வழங்குவதற்கான நிதி இருந்தும், ஓய்வூதியம் வழங்காமல் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுகிறது. ஓய்வூதியம் வழங்கும் பிரிவில் உள்ள சிலரின் முரண்பாடான செயல்பாட்டால் ஓய்வூதியா்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். ஆகவே, துணைவேந்தா், பதிவாளா் ஆகியோா் தலையிட்டு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.