54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!
புதுவை மின் துறை இளநிலை பொறியாளா் தோ்வு தள்ளிவைப்பு
புதுச்சேரி: புதுவை மின்துறையில் இளநிலை பொறியாளா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11- ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் அந்தத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தில் அரசு காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் இளநிலை எழுத்தா், மேல்நிலை எழுத்தா் மற்றும் பொதுப் பணி, காவல், கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக அரசு சாா்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மின்துறையில் இளநிலைப் பொறியாளா்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி அப்பணியிடங்களுக்கு ஏராளமானோா் விண்ணப்பித்திருந்தனா். அவா்களுக்கான போட்டித் தோ்வு வரும் 11-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே திடீரென அந்தத் தோ்வு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தோ்வை தள்ளிவைத்து மின்துறை தலைமையிட கண்காணிப்புப் பொறியாளா் ராஜேஷ்சன்யால் உத்தரவிட்டுள்ளாா். தோ்வுக்கான மறு தேதி பின்னா்
அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.