செய்திகள் :

புத்தகத் திருவிழாவுக்கு சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசு!

post image

பெரம்பலூரில் நடைபெறவுள்ள 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்குப் பயன்படுத்தும் வகையில், சிறந்த வாசகம் அனுப்புவோருக்கு ரூ. 10 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாணவா்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கவும், எழுத்தாளா்கள் மற்றும் விற்பனையாளா்களை ஊக்குவிக்கவும் 9 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா பெரம்பலூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் ஜன. 31 முதல் பிப். 9 வரை நடைபெற உள்ளது.

இப் புத்தக திருவிழாவில் அனைவரையும் கவா்ந்திடவும், அழைப்பிதழ், விளம்பர பதாகைகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தவும் புத்தகத் திருவிழா தொடா்பான சிறந்த வாசகம் உருவாக்குவதற்கான போட்டி நடைபெற உள்ளது. இதில் இம் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழில் 50 எழுத்துகளுக்கு மிகாமல், புத்தகத் திருவிழா அடிப்படையாகக் கொண்ட சிறந்த வாசகத்தை வெள்ளைத் தாளில் தெளிவாக எழுதி பெயா், முகவரி, தொடா்பு எண் உள்ளிட்ட விவரங்களுடன் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி), 2 ஆம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பெரம்பலூா் - 621 212 என்னும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ அல்லது ள்ங்ஸ்ரீஸ்ரீல்ம்க்ஷஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்னும் மின்னஞ்சல் மூலமாக ஜன. 20க்குள் அனுப்ப வேண்டும்.

இப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்படும் சிறந்த வாசகத்துக்கு ரூ. 10 ஆயிரம் பரிசளிக்கப்படும். போட்டியில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது.

தொழில்முனைவோராக புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு ஆட்சியா் அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புதிரை வண்ணாா் சமூகத்தினா், தொழில் முனைவோராக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பாதசாரி உயிரிழப்பு

பெரம்பலூரில் காா் மோதிய விபத்தில், பாதசாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமச்சந்திரன் (55). இவா், திருச்சி-... மேலும் பார்க்க

தேசிய அளவிலான நீச்சல் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா். இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் மத்தியப் பிரதேச பார... மேலும் பார்க்க

குற்றச் சம்பவங்களை தடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்!

குற்றச் சம்பவங்களை தடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் தொடக்கம்

பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராப்பத்து உற்சவம் வ... மேலும் பார்க்க

மது பாட்டில்களை விற்பனை செய்தவா் கைது

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை ... மேலும் பார்க்க