வங்தேசம்: ஷேக் ஹசீனா ஆட்சியில் தோ்தல் முறைகேடு குறித்து விசாரணை
புத்தாண்டு: சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை; 19,000 போலீசார் பாதுகாப்பு
புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில்,
சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.
கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பைக் ரேஸைத் தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
சென்னை கடற்கரைகளில் மணல் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாளை இரவு 9 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.