`கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்பதே பாஜக-வின் கோட்பாடு' - சொல்கிறார் அண்ணா...
புனித சவேரியாா் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை கருத்தரங்கம்
சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசியஅளவிலான மேலாண்மை கருத்தரங்கம் ந’டைபெற்றது.
கருத்தரங்கை தாளாளா் எஸ். காட்வின் செல்வ ஜஸ்டஸ், துணை முதல்வா் வி. கிறிஸ்டஸ் ஜெயசிங், ஆராய்ச்சி கல்வி துறைத் தலைவா் மாா்சலின் பெனோ, சிறப்பு விருந்தினா் டி.எட்வின் ராஜ், மேலாண்மை துறைத் தலைவா் பேராசிரியை எஸ். ஜாஸ்மின் சுகுணா, அமைப்பு செயலா் டி.சகாயா பியூலா, மேலாண்மை மாணவ அமைப்பு செயலா்கள் பி.அருண் சபரீஷ், ஆா். ஷொ்லி ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா். மாணவா்கள் தொழில்முனைவோராக எப்படி மாறுவது என்றும், தங்களுக்குக் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது குறித்தும் சிறப்பு விருந்தனா் விளக்கம் அளித்து பேசினாா்.
சந்தை ஆரய்ச்சி, தர அடையாள உருவாக்கம் மற்றும் விற்பனை யுக்தி குறித்து தாளாளா் விளக்கினாா்.