செய்திகள் :

பும்ரா மட்டும் இல்லையெனில்... மெக்ராத் கூறியதென்ன?

post image

இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மட்டும் இல்லையெனில் இந்தியா மோசமாக தோற்றிருக்கும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத் பாராட்டி பேசியுள்ளார்.

பார்டர் - கவாஸ்கர் தொடரில் 4 போடிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. இந்திய அணி உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதி மிகவும் கடினமாகியுள்ளது.

இந்தத் தொடர் முழுவதும் இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மட்டுமே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.

பும்ரா, இதுவரை இந்தத் தொடரில் மட்டும் 30 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். சர் கரிஃபீல்டு சோபர்ஸ் விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் அஸ்வினின் அதிகபட்ச ஐசிசி டெஸ்ட் தரவரிசை புள்ளிகளைக் கடந்து பும்ரா சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பும்ராவின் ரசிகன்

இந்த நிலையில் முன்னாள் ஆஸி. வீரர் க்ளென் மெக்ராத் பும்ரா குறித்து கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய பகுதியாக பும்ரா விளங்குகிறார். அவர் இல்லாமல் இருந்தால் இந்தத் தொடர் ஒரு சார்பாக (ஆஸி. க்கு சாதகமாக ) இருந்திருக்கும். அந்த அளவுக்கு பும்ரா சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

முதல் தரமான இளம் வீரர் எப்படி தவமைப்பதென வழியை கண்டுபிடித்துள்ளார். கடைசி சில காலடிகளில் தனது பந்துவீச்சில் எப்படி சக்தியை கொண்டுவருகிறார் என்பது நம்பமுடியவில்லை.

பும்ராவுக்கு இருப்பதுபோல் எனக்கும் ஹைபர் எக்ஸ்டென்ஷன் புஜம் (கையின் மேற்பகுதி) இருக்கும். அதை இருபுறமும் பும்ரா சிறப்பாக பயன்படுத்துகிறார். நான் பும்ராவின் மிகச்சிறந்த ரசிகன் என்றார்.

அசத்தும் பும்ரா

2024ஆம் ஆண்டில் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். 13 டெஸ்ட் போட்டிகளில் 71 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். சராசரி 14.92 ஆக இருக்கிறது. 5 முறை 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுக்கு மேல் சிறந்த பந்துவீச்சு சராசரி வைத்துள்ள வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

31 வயதாகும் பும்ரா தனது சிறப்பான செயல்பாடுகளை வழங்கினால் கடைசி டெஸ்ட்டில் வென்றால் 2-2 என தொடர் சமநிலையில் முடிவடையலாம்.

கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டியில் இருந்து வெளியேறும். குறைந்தபட்சம் டிரா செய்தால், இலங்கை ஆஸியை வீழ்த்த வேண்டும்.

வெற்றி பெறுவதுதான் இந்தியாவுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. அதனால் சிட்னியில் ஜன.3இல் நடைபெறும் கடைசி டெஸ்ட்டுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற மே.இ.தீ. அணி!

மே.இ.தீ. அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இன்று (ஜன.6) மே.இ.தீ. அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தது. இதற்கு முன்னதாக 2006ஆம் ஆண்டு மே.இ.தீ. அணி பாகிஸ்தானில் ட... மேலும் பார்க்க

பிஜிடி கோப்பையை வழங்க கவாஸ்கர் அழைக்கப்படாதது ஏன்? கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்!

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வழங்க அழைக்கப்படாதது குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம் அளித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்ற ஆஸ்திரேலிய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ப... மேலும் பார்க்க

இங்கிலாந்து தொடரிலிருந்து விலகும் பும்ரா?

இங்கிலாந்து உடனான தொடரிலிருந்து இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விலகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகு தசைப் பிடிப்பு காரணமாக பார்டர்- கவாஸ்கர் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்... மேலும் பார்க்க

டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முகமது சிராஜ்!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவ... மேலும் பார்க்க

காரணம் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள்: முன்னாள் இந்திய கேப்டன்

எந்த ஒரு காரணமுல் கூறாமல் மூத்த வீரர்கள் ரஞ்சி கோப்பையில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பும்ராவிடம் பேச கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை: கௌதம் கம்பீர்

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிடம் பேச சாம் கான்ஸ்டாஸுக்கு உரிமையில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சி... மேலும் பார்க்க