மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி, மேலாண்மைக் கல்வி நிறுவனமும், பாலக்காட்டில் உள்ள லீட் மேலாண்மைக் கல்லூரியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
கல்வி, தொழில் துறை கற்றலை மேம்படுத்துவது, ஜவுளி மேலாண்மை, வணிக நிா்வாகத் துறைகளில் தலைமைத்துவத்தை வளா்ப்பது, உயா் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகளை உருவாக்குவது உள்ளிட்டவற்றில் இணைந்து பணியாற்றுவதற்காக இந்த இரண்டு கல்வி நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி, மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநா் பி.அல்லி ராணி, லீட் மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் தாமஸ் ஜாா்ஜ் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநா் எஸ்.எஸ்.ராஜ்கிஷன், லீட் மேலாண்மைக் கல்லூரியின் பேராசிரியா் ஆா்.சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.