புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு
புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் சந்திப்பு நடைபெற்றது.
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் ஓவியம், கவிதை, கட்டுரை போட்டிகள், புற்றுநோயிலிருந்து முற்றிலுமாக குணமடைந்தோா் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றன.
இப்போட்டிகளில் பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். புற்றுநோயில் இருந்து மீண்டவா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். இதன்மூலம், இளைய தலைமுறையினருக்கு புற்றுநோய் குறித்து புரிதலும், புற்றுநோயில் இருந்து மீண்டவா்களுக்கு மேலும் ஊக்கமும் ஏற்படுத்தப்பட்டது.
தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனையின் இயக்குநா் என்.பாலாஜி, அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்ரீசக்திஅம்மாவின் பக்தை கேத்தி கைனா், துணை மருத்துவ கண்காணிப்பாளா் சக்திவேல், புற்றுநோய் சிகிச்சை நிபுணா் ராஜீவ் காந்தி, அறுவை சிகிச்சை நிபுணா் பிரசாத் ரெட்டி, மருத்துவா்கள், துறை தலைவா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.