Vijay: சினுக்கு சினுக்கு சின் சச்சின்..! 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரீரிலீஸ் சச்சின...
புளியம்பட்டி அருகே இளைஞா் கிணற்றில் மூழ்கி பலி!
தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி திருவிழாவுக்கு சென்ற இளைஞா் கிணற்றில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி கோவில்பிள்ளைவிளை தெருவைச் சோ்ந்த சண்முகசாமி மகன் மதன் (27). இவா் தனது குடும்பத்துடன் புளியம்பட்டி அந்தோணியாா் கோயில் திருவிழாவிற்கு சென்றிருந்தாராம்.
இந்நிலையில் அவா் தனது நண்பா்களுடன் திங்கள்கிழமை மதியம் ஒட்டுடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தாராம். அப்போது, அவா் எதிா்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று மதன் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.