சமஸ்கிருதம் கலக்காமல் இருந்திருந்தால் தமிழ் தேசிய மொழியாகியிருக்கும் - பழ.கருப்ப...
புஷ்பா திரைப்பட நடிகருக்கு திருமணம்: நீண்ட காலக் காதல் கைக் கூடியது; காதலியை சந்தித்தது எப்படி?
சமீபத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஜாலி ரெட்டியாக நடித்தவர் டாலி தனஞ்சயா. சமீபத்தில் வெளியான ஜிப்ரா திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பாரட்டப்பட்டது. இவர் தன்யதா கௌரக்லரா என்ற மருத்துவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் மைசூர் மாளிகையில் திருமணம் நடந்திருக்கிறது. இவர்களின் திருமணத்திலும், வரவேற்பு நிகழ்ச்சியிலும் பல நட்சத்திரங்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர்.


நடிகர் டாலி தனஞ்சயா ஒரு பேட்டியில், ``என் காதலி தனஞ்சயா என்னை ஒரு ரசிகராக சந்தித்ததார். பின்னர் நாங்கள் நண்பர்களானோம். அது அப்படியே காதலாக மாறியது." என்றார். இவர் ரோஹித் பதகி இயக்கும் கன்னடப் படமான உத்தரகாண்டா படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிவ ராஜ்குமார், விஜய் பாபு, யோகேஷ் பட் உள்ளிட்டப் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களின் திருமணப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.