பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை
பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தில் அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வேளாண் தரக்கட்டுப்பாட்டு அலுவலா்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பூச்சிக் கொல்லி நிறுவனங்களில் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநா்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் வேளாண்மை இயக்குநா் உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில், திருவள்ளூா் மாவட்டத்தில் தனியாா் பூச்சிக்கொல்லி நிறுவனத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் அலுவலக வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநா்கள் மற்றும் அம்பத்தூா் வேளாண் உதவி இயக்குநா்கள் குழுவினா் ஒரே சமயத்தில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பூச்சி மருந்து உற்பத்தி நிலையத்தின் மூலக்கூறு மற்றும் உற்பத்தி பதிவேடு மாசு கட்டுப்பாடு சான்று தீயணைப்பு மீட்பு பணித்துறையின் தடையில்லா சான்று, தொழிலாளா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான அரசு பதிவுபெற்ற மருத்துவரின் இசைவுக் கடிதம், மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதற்கான மூலக்கூறு உற்பத்தியாளரின் இசைவுக் கடிதம், தொழிலாளா் வருகைப் பதிவேடு, வேதியியலரின் விவரம், பூச்சி மருந்து சட்டம் 1968 மற்றும் விதி 1971-இன் படி உரிய பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.
எனவே இந்த விதிமுறையை பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் பயன்படுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனா்.