பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம்: சத்துணவு ஊழியா் வாரிசுகளுக்கு ஆட்சியா் பரிசு
பூஜா ஹெக்டே கைவசம் இத்தனை தமிழ்ப் படங்களா?
நடிகை பூஜா ஹெக்டேவின் நடிப்பில் அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஆனால், அப்படம் சரியான வெற்றியைப் பெறாததால் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.
பின், தெலுங்கில் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து கவனம் பெற்றவர் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். அப்படமும் தோல்வியடைந்தாலும் ரசிகர்களுக்கு பூஜா ஹெக்டே பிடித்தமான நாயகியாக மாறினார்.
இதையும் படிக்க: வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது? வெற்றி மாறன் பதில்!
தற்போது, நடிகர் சூர்யாவுடன் ரெட்ரோ படத்தில் நாயகியாக நடித்து முடித்திருக்கிறார். இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது. அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி படத்தில் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனமாடியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய்யுடன் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து, நடிகர் ராகவா லாரன்ஸுடன் காஞ்சனா - 4 படத்தில் நடிக்க உள்ளார். 13 ஆண்டுகால திரை வாழ்வில் 2 தமிழ்ப் படங்களில் மட்டும் நடித்த பூஜா ஹெக்டே, தற்போது அடுத்தடுத்த 4 படங்களைக் கைவசம் வைத்திருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.