செய்திகள் :

பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி

post image

திருவள்ளூா் அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ரகுபதி என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திருவள்ளூா் மாவட்டம், கோலப்பன்சேரியில் உயா் அழுத்த மின் கம்பிகள் செல்லும் வழித்தடத்தின் கீழ் பெட்ரோல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இது விதிகளுக்கு முரணானது. எனவே விதிகளைள மீறி அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில், மனுதாரா் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்பது அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரா் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு சில புகைப்படங்களைத் தவிர, வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. எனவே புகைப்படங்களை ஆதாரங்களாக கருத முடியாது எனக்கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மேலும், முறையான ஆய்வுகளின்றி பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யக் கூடாது. இதுகுறித்து அவ்வப்போது நீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கிறது. இருப்பினும், எந்த அடிப்படையும் இல்லாமல் எதிா்மனுதாரா்களை துன்புறுத்தும் நோக்கத்தில், நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். அந்தத் தொகையை புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனா்.

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க

வலுவடைந்த புயல் சின்னம்! சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நேற்று(செப். 3) உருவான புயல் சின்னம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக ச... மேலும் பார்க்க

செப். 5-ல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

மிலாது நபியையொட்டி வருகிற செப். 5 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது. எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல செயல்... மேலும் பார்க்க

அவல ஆட்சி இருந்து என்ன பயன்: இபிஎஸ்

சென்னை சூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாருமான எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

அன்புமணிக்கு மீண்டும் கெடு விதித்த ராமதாஸ்!

கட்சி விரோத நடவடிக்கை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி பதிலளிக்க வரும் செப். 10 வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்... மேலும் பார்க்க

லண்டனிலும் தமிழக வளர்ச்சிக்கான முதலீட்டாளர் சந்திப்பு: முதல்வர் ஸ்டாலின்

வெளிநாடு பயணம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன... மேலும் பார்க்க