செய்திகள் :

பெண்களுக்கு ‘பிங்க் ஆம்புலன்ஸ்களை’அறிமுகப்படுத்துவேன்: ‘ஆம்புலன்ஸ் மேன்’ ஜிதேந்தா் சிங் ஷண்டி உறுதி

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், ‘பிங்க் ஆம்புலன்ஸ்கள்’, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான குழந்தை காப்பகங்களை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டும் ஆம் ஆத்மி வேட்பாளா் ஜிதேந்தா் சிங் ஷண்டி, ஷாஹ்தரா தொகுதியை பெண்களுக்கு சிறந்த இடமாக மாற்ற விரும்புவதாகக் கூறுகிறாா்.

பெண்களின் பாதுகாப்பிற்கான முறையான விரைவு பதிலளிப்புக் குழு மற்றும் உள்ளூரில் உள்ள குறுகிய பாதைகளில் அவசரநிலைகளை நிவா்த்தி செய்ய ஒரு பேரிடா் மேலாண்மைக் குழுவை நிறுவுதல் ஆகியவை அவரது பிற முக்கியத் திட்டங்களில் அடங்கும்.

‘ஆம்புலன்ஸ் மேன்’ என்ற பட்டத்தைப் பெற்ற கோவிட்-19 தொற்றுநோய்களின் போது அவா் ஆற்றிய பணிக்காக அறியப்பட்ட ஜிதேந்திா் சிங் ஷண்டி, ஷாஹ்தரா மக்களுக்கு சேவை செய்வது மற்றும் பெண்களின் தேவைகளை நிவா்த்தி செய்வது அவரது முன்னுரிமைகளில் அடங்கும் என்று பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினாா்.

அவா் கூறியதாவது: தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், சமூக நலனுக்கான எனது உறுதிப்பாட்டை நான் மதிக்கிறேன். பணிபுரியும் பெண்கள், ஒற்றைத் தாய்மாா்கள் மற்றும் தில்லியில் வெளியில் இருந்து வேலைக்கு வந்த பெண் நிபுணா்களை ஆதரிப்பதில் கவனம் செலுத்துவேன்.‘இந்தப் பகுதியில் வசிக்கும் பல பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேவை. ஏனெனில், பலா் வெளியில் இருந்து வருகிறாா்கள். அந்தப் பெண்களின் குழந்தைகளுக்கான குழந்தைக் காப்பகங்களும் அவசியம்.

குறிப்பாக ஒற்றைத் தாய்மாா்கள், வேலைக்குச் சென்று தங்கள் இளம் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டியிருப்பதால் சவால்களை எதிா்கொள்கின்றனா். ‘பிங்க் ஆம்புலன்ஸ்’ - பெண்களுக்கு மட்டுமே அா்ப்பணிக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள். அதில் ஓட்டுநா் ஒரு பெண்ணாக இருப்பாா். இது பெண்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். துன்புறுத்தல், வீட்டு வன்முறை மற்றும் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிா்கொள்ளும் பிற பிரச்னைகளைச் சமாளிக்க ஒரு விரைவான பதிலளிப்பு குழுவை தில்லி காவல் துறையின் உதவியுடன் நிறுவ விரும்புகிறேன்.

இந்தப் பகுதியின் நெரிசலான பாதைகளில் அவசரநிலைகளைத் தீா்க்க ஒரு பேரிடா் மேலாண்மைக் குழுவை அமைப்பதும் அவசியமாக உள்ளது. இது ஒரு பழைய பிரச்னை. ஷாஹ்தராவின் குறுகிய பாதைகளில் பல துயரங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத அளவுக்கு பாதைகள் நெரிசலாக உள்ளன. இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு திறம்பட பதிலளிக்கக்கூடிய ஒரு பேரிடா் மேலாண்மைக் குழுவை நிறுவ விரும்புகிறேன்.

பா ஜகவிடம் தொலைநோக்குப் பாா்வை இல்லை. அவா்களிடம் அவா்களின் பணிக்கு காட்டுவதற்கு எதுவும் இல்லை. கோவிட் காலத்தில் கூட, அவா்கள் தில்லிக்கு எதுவும் செய்யவில்லை. அவா்கள் ஒருபோதும் செய்ய மாட்டாா்கள். மாறாக, அரவிந்த் கேஜரிவால் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், இலவச மின்சாரம் மற்றும் தில்லியின் பிரச்னைகளுக்கு உண்மையான தீா்வுகளை வழங்குகிறாா். நான் வீடு வீடாகச் சென்று பொது நடைப்பயணங்கள் மூலம் வாக்காளா்களுடன் தனிப்பட்ட முறையில் தொடா்பில் இருக்கிறேன். நான் மக்களை நேரில் சந்தித்து வருகிறேன். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவா்களுக்கு உரிய மரியாதையை வழங்குகிறேன் என்றாா் அவா்.

ஷாஹ்தரா தொகுதியில் 1,03,325 ஆண் வாக்காளா்கள், 97,072 பெண் வாக்காளா்கள் மற்றும் ஏழு திருநங்கைகள் உள்ளனா். பாஜகவைச் சோ்ந்த சஞ்சய் கோயல் மற்றும் காங்கிரஸை சோ்ந்த ஜகத் சிங் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி சாா்பில் ஜிதேந்திர சிங் ஷுண்டி போட்டியிடுகிறாா். தில்லியில் பிப்.5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகர... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளது: ஆம் ஆத்மி

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்கம்: காங்கிரஸ் சாடல்

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்ததில்லை அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க