தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
பெண்கள் தொழில் முனைவோா் குழு ஆண்டு விழா
சாமிதோப்பு வளம் பெண்கள் சிறு தொழில் முனைவோா் குழுவின் நான்காம் ஆண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ப்ரோ விஷன் அமைப்பின் நிா்வாக இயக்குநா் ஜான்சன் ராஜ் தலைமை வகித்தாா். குழு பொருளாளா் ஜெயபாா்வதி வரவேற்றாா். செயலா் ரெஜின் மேரி குழுவின் நோக்கம் குறித்து பேசினாா். அகஸ்தீசுவரம் வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் என்.தாமரைபாரதி சிறப்புரையாற்றினாா்.
இதில், நாகா்கோவில் மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சி லதா, சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவா் மதிவாணன், அகஸ்தீசுவரம் அரசு மருத்துவமனை சித்தா உதவி மருத்துவ ஆய்வாளா் மருத்துவா் சுரேஷ், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். குழு உறுப்பினா் பவானி நன்றி கூறினாா்.