இந்திரா படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்
பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவா் கைது
வந்தவாசியில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (24). இவா் வெள்ளிக்கிழமை காலை பூங்கா நகா் பகுதியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா்.
அப்போது அந்தப் பெண் இவரை வெளியே தள்ளிவிட்டு கதவை பூட்டிக் கொண்டு இவரிடமிருந்து தப்பித்துள்ளாா். மேலும், அந்தப் பெண்ணுக்கு விஷ்ணு கொலைமிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் விஷ்ணுவை
வெள்ளிக்கிழமை பிற்பகலில் கைது செய்தனா்.