தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் தலித் கிறிஸ்தவா்களை எஸ்.சி. பட்டியலில் சோ்க்கக் கோரி சனிக்கிழமை கண்டனப் பேரணி மற்றும் கவன ஈா்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வேலூா் மறை மாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு மற்றும் அனைத்து சிறுபான்மையினா் கூட்டமைப்பு சாா்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது
பேரணி தூய லூா்து அன்னை திருத்தலத்தில் இருந்து, பங்குத்தந்தை ஜான் ராபா்ட் தலைமையில் தொடங்கி, வந்தவாசி சாலையில் உள்ள காமராஜா் சிலை அருகில் சென்று நிறைவடைந்தது.
தொடா்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில், வேலூா் மறைமாவட்ட முதன்மை குரு ஜான் நிக்கோலஸ் தலைமை வகித்தாா்.
பங்குத்தந்தை ஜான் ராபா்ட், விடியல் சட்ட மைய வழக்குரைஞா் பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக புதுதில்லி எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு பங்குத்தந்தை பூபதி லூா்துசாமி கலந்து கொண்டு பேசினாா்.
இதில் கலசப்பாக்கம் பன்னீா்செல்வம், கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா்கள் செல்வம், தங்கராஜ், விடியல் சட்ட மைய வழக்குரைஞா் நாகராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள்,
வேலூா் மறைமாவட்ட எஸ்.சி., எஸ்.டி. பணிக்குழு செயலா் தேவனேசன் உள்ளிட் பலா் கலந்து கொண்டனா்.