தென்காசி நகராட்சி வாசலில் பாய் விரித்து படுத்த பாஜக நிர்வாகி
பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு
போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பகவதி மகள் அமராவதி (60). இவா் தனியாக வசித்து வருகிறாா். இவரது வீட்டருகே வசிப்பவா் ஆண்டவா் மகன் சுரேஷ். இவா் அடிக்கடி மது போதையில் அமராவதியுடன் தகராறு செய்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை சுரேஷ் மீண்டும் அமராவதியுடன் தகராறு செய்து அவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் சுரேஷ் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.