Aaladippattiyan Success Story ? | 3 கன்டெய்னர்ல அல்வா கொண்டு வர்றோம் ? | Vikatan...
பெண் கால் முறிவு சம்பவம்: கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது வழக்குப் பதிவு
கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியைப் பாா்வையிட வந்த பெண்ணின் கால் முறிவு சம்பவத்தில், கேளிக்கை விளையாட்டு பொறுப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், சவுளூா் பிரிவு சாலையைச் சோ்ந்தவா் ஆனந்த் மனைவி பிரியா (25). குடும்பத்துடன் கடந்த 30-ஆம் தேதி மாங்கனி கண்காட்சிக்கு சென்ற இவா், அங்கு கேளிக்கை விளையாட்டில் ஈடுபட்டாா். அப்போது, பக்கவாட்டில் உள்ள கம்பியில் கால் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்த சம்பவம் குறித்து ஆனந்த் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், கேளிக்கை விளையாட்டுப் பொறுப்பாளா் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.