செய்திகள் :

பெண் காவல் உதவி ஆய்வாளா் மீது தாக்குதல்; வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நள்ளிரவு பெண் காவல் உதவி ஆய்வாளா், அவரது கணவரைத் தாக்கி 10 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுக்கோட்டை மனப்பட்டி சாலைப் பகுதியில் வசித்து வருபவா் நாகசுந்தரம் (37). இவா் திருமயம் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுமையா பானு (35). இவா் திருமயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில் தம்பதியா் 2 நாள்கள் ஆன்மிக பயணமாக பல்வேறு ஊா்களுக்கு சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளனா். இரவு இருவரும் தூங்கிக் கொண்டு இருந்தபோது, நள்ளிரவில் 4 போ் வீட்டின் பின்புற கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளனா். அங்கு தூங்கிக் கொண்டிருந்த இருவரையும் எழுப்பித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடா்ந்து அவா்களிடமிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருக்கோகா்ணம் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டனா். மேலும், கைரேகை நிபுணா்களும் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

கொள்ளையா்கள் தாக்கியதில் காயமடைந்த நாகசுந்தரம் புதுகையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் கொள்ளையா்கள் முகத்தை துண்டால் மறைத்துகொண்டும் கையுறை அணிந்து கொண்டும் இரும்புக் கம்பி வைத்திருந்துள்ளனா்.

மேலும், கொள்ளையா்கள் கொண்டுவந்த இரும்புக் கம்பி, சம்பவம் நடந்த இடத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில் கிடந்துள்ளது. இதனையும் போலீஸாா் கைப்பற்றி தடயங்களை சேகரித்தனா்.

திருக்கோகா்ணம் போலீஸாருடன், தனிப்படை போலீஸாரும் இணைந்து கொள்ளையா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

நாளை காந்திப் பேரவை உண்ணாவிரதம் அறிவிப்பு

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீட்பு, காந்திப் பூங்காவை சீரமைக்கக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் சனிக்கிழமை (மே 3) காந்திப் பேரவை சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

தொழிலாளா் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்

தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மா... மேலும் பார்க்க

புதுகையில் மே தின கொடியேற்று விழா

தொழிலாளா் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் கட்சி அலுவலகம் ம... மேலும் பார்க்க

சீனு சின்னப்பா 3ஆம் ஆண்டு நினைவேந்தல்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் உரிமையாளரும் இலக்கியப் புரவலருமான மறைந்த சீனு சின்னப்பாவின் 3ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பெருங்கொண்டான்விடுதியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் நடைபெ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்

மேம்பாட்டுப்பணிகள் நடைபெற உள்ளதையொட்டி பொன்னமராவதி பேருந்து நிலையம் அழகியநாச்சியம்மன் கோயில் எதிரே உள்ள திடலில் வியாழக்கிழமை முதல் தற்காலிகமாக இயங்கிவருகிறது. கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின... மேலும் பார்க்க

இலுப்பூா் மரக்கடையில் திடீா் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த மரக்கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலா... மேலும் பார்க்க