மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
நாளை காந்திப் பேரவை உண்ணாவிரதம் அறிவிப்பு
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி மீட்பு, காந்திப் பூங்காவை சீரமைக்கக்கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வரும் சனிக்கிழமை (மே 3) காந்திப் பேரவை சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனா் வைர.ந. தினகரன் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியை மீண்டும் உருவாக்க வேண்டும். பழைமையான காந்திப் பூங்காவை மீண்டும் சீரமைத்து செயல்படுத்த வேண்டும். ஆவுடையாா்கோவில் வட்டம் பேரானூா் கிராமம் மாரமங்கலம் ஏரி நுழைவுப் பகுதியில் பல்லுயிா்ப் பெருக்கம் கொண்ட காட்டில் தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற வேண்டும். புதுக்கோட்டை நகரிலுள்ள காந்திப் பேரவை அலுவலகத்தில் அண்மையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை காந்திப் பூங்கா பகுதியில் சனிக்கிழமை காலை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.