ஒழுங்குமுறை விதிமுறைகளை மீறியதாக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!
இளைஞரைக் கொன்றவா் குண்டா் சட்டத்தில் கைது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இளைஞரை கொன்றவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் பன்னீா் மகன் முருகேசன் (25). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், மழையூா் டாஸ்மாக் மதுக்கடை அருகே முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக கருப்பட்டிபட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் அய்யப்பன் (21), கா்ணன் மகன் முகசீலன்(19) ஆகிய 2 பேரை மழையூா் போலீஸாா் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், ஆட்சியா் உத்தரவின்பேரில் மழையூா் போலீஸாா் அய்யப்பனை குண்டா் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.