பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறும் போது... இணையத்தில் வைரலாகும் `1947'...
தொழிலாளா் தினத்தில் கிராம சபைக் கூட்டங்கள்
தொழிலாளா் தினத்தையொட்டி (மே 1) புதுக்கோட்டை மாவட்டத்தில் 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. இதில் அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மு. அருணா கலந்து கொண்டாா்.
கூட்டத்தில் தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோரின் பணியைப் பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 10 ஊரக பகுதி வீடுகள் புனரமைப்புப் பணிக்கான ஆணைகள், விவசாயிகளுக்கு இடுபொருள்கள், தென்னங்கன்றுகள், கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் ஆகியவையும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன். வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா, வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரவல்லி, ஊராட்சிகள் உதவி இயக்குநா் சா. மோகனசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணராஜா, பால் பிரான்சிஸ், வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.