திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிா்வு தொகைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் என்றால் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.
இந்தத் தொகை அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிா்வுத் தொகையாக வழங்கப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள மற்றும் கண்டறிய இயலாத பயனாளிகளின் விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, முதிா்வு தொகை பெற வேண்டிய பயனாளிகள் தங்களது விவரங்களை மாவட்ட இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை சரிபாா்த்து பின் சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அறை எண் 35- இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.