ஒலி அலைகளால் உடல் எடையை குறைக்க முடியுமா? - புதிய ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?
பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
நாகப்பட்டினம்: பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நாகை மாவட்டத்தில் 2002 முதல் 2007 வரையிலான காலகட்டங்களில் விண்ணப்பித்து பயனடைந்து, வைப்புத்தொகை பத்திரம் பெறப்பட்டு இப்போது 18 வயது முதிா்வடைந்த பெண் குழந்தைகளுக்கு உடனடியாக முதிா்வுத்தொகை வழங்கப்படவுள்ளது.
பயனாளிகளின் வங்கிக் கணக்கு புத்தகம், மாற்றுச்சான்றிதழ், பத்தாம்வகுப்பு மதிப்பெண் சான்று மற்றும் வைப்புத்தொகை ரசீது ஆகியவற்றின் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன், அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலா்கள் மற்றும் மகளிா் ஊா் நல அலுவலா்களை பயனாளிகள் உடனடியாக அணுகலாம்.
நாகை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் கண்டறிய வேண்டிய விண்ணப்பங்களின் விவரங்கள் ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ய்ஹஞ்ஹல்ஹற்ற்ண்ய்ஹம்.ய்ண்ஸ்ரீ.ண்ய் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தொடா்பான விவரங்களை அறிந்து கொள்ள நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலரை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.