பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு ஓட்டம்: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தருமபுரியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
‘பெண் குழந்தைகளைக் காப்போம்’, ‘பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற தலைப்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
இந்த மாரத்தான் போட்டியில் கல்லூரி மாணவா்கள் 235 பேரும், மாணவிகள் 180 பேரும் கலந்துகொண்டனா். அரசு கல்லூரி முன் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் செந்தில் நகா், இலக்கியம்பட்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
போட்டிகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டன.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா்நலன் அலுவலா் தே.சாந்தி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.