இலக்கை நிா்ணயித்து செயல்பட வேண்டும்: மாணவா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்
`பெண் குழந்தை என்பதில் பெரும் உற்சாகம்' - அம்மா ஆனார் 'நாதஸ்வரம்' ஶ்ரீத்திகா
'நாதஸ்வரம்' தொடர் மூலம் டிவியில் ரொம்பவே பிரபலமானவர் ஶ்ரீத்திகா.
சீரியலில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கும் முயற்சி செய்து வருகிற இவர், சீரியல்கள் தாண்டி ஒருசில படங்களிலும் தலை காட்டியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு, துபாயைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்து விட்டது.
தொடர்ந்து 'மலர்' சீரியலில் இவர் நடித்த போது அந்தத் தொடரில் ஹீரோவாக நடித்த எஸ்.எஸ்.ஆர். ஆர்யனுக்கும் இவருக்கும் இடையில் காதல் மலர இருவரும் ஒன்றாக பழகி வந்தனர். ஒருகட்டத்தில் திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்ய, கடந்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது.

பெரிய உற்சாகம்
இந்நிலையில் ஶ்ரீத்திகா தாய்மை அடைய, சில வாரங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் சின்னத்திரையில் ஶ்ரீத்திகா, ஆர்யன் இருவருக்கும் நெருக்கமாக இருக்கும் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
தற்போது அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார் ஶ்ரீத்திகா.
குழந்தை கடந்த வாரம் பிறந்ததாக ஆர்யன், ஶ்ரீத்திகா இருவருமே தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ள இருவரும் பெண் குழந்தை என்பது பெரிய உற்சாகத்தைத் தந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.