ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
பெண் துப்புரவுப் பணியாளா் கொலை: இளைஞா் கைது
பெண் துப்புரவுப் பணியாளரின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக, அவரின் நண்பரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், நல்லம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சங்கரின் (46) மனைவி செல்வராணி (38). இவா், கீரப்பாக்கம் சாலையிலுள்ள தனியாா் கல்லூரியில் துப்புரவு பணியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரை கடந்த 3-ஆம் தேதி முதல் காணவில்லை என சங்கா் கொடுத்த புகாரின்பேரில், தாழம்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், செல்வராணியிடம் நட்பாக இருந்துவந்த அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் (31) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், குமரேசனுக்கும் செல்வராணிக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக நட்பு இருந்ததும், இந்நிலையில் செல்வராணி, தன்னுடன் பணியாற்றும் கோபால்கிருஷ்ணனுடன் நெருக்கமாக இருந்துவந்ததைத் தெரிந்துகொண்ட குமரேசன், செல்வராணியை குமுளியிலுள்ள காப்புக்காட்டுக்கு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் செல்வராணியின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலை செய்யப்பட்ட பகுதி காயா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கு அங்கு மாற்றப்பட்டது. இதை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக குமரேசனிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.