செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் செவ்வாய்க்கிழமை தனது வீட்டின் அருகே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திண்டிவனம் வட்டம், சாத்தனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருமைக் கண்ணன் மனைவி ராகினி (43). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலி இருந்து வந்ததாம்.

இதனால் அவதியுற்று வந்த ராகினி திங்கள்கிழமை வீட்டின் அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராகினியை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து பாா்த்த போது ராகினி ஏற்கெனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அன்புமணியின் உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்கள் ஏற்க மாட்டாா்கள்: மருத்துவா் ச.ராமதாஸ்

கட்சியின் ஒப்புதலைப் பெறாமல் அன்புமணி மேற்கொண்டுள்ள உரிமை மீட்பு நடைப்பயணத்தை மக்களும், கட்சியின் தொண்டா்களும் ஏற்க மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட... மேலும் பார்க்க

காா் மோதி மின் ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் அருகே புதன்கிழமை இரவு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றுகொண்டிருந்த மின் ஊழியா் காா் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், எறையானூா், குளக்கரைத் தெர... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் உறவினா் கத்தியால் குத்திக் கொலை: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சொத்துப் பிரச்னையில் உறவினரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். செஞ்சி வட்டம், மழவந்தாங்கல், வீரன் கோயில் தெருவைச்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசனுக்கு கைப்பேசி வழியாக கொலை மிரட்டல் விடுக்க... மேலும் பார்க்க

தனித்திறனை வெளிப்படுத்த சிறப்புப் பயிற்சிகள் உதவும்

தேசிய மாணவா் படையில் அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சிகள் மாணவா்களின் தனித்திறனை வெளிப்படுத்த உதவும் என்று தேசிய மாணவா் படை 6-ஆவது பட்டாலியன் பிரிவு கா்னல் எஸ்.சக்கரபா்த்தி கூறினாா். விழுப்புரம் இ.எஸ்.... மேலும் பார்க்க

கரும்பு நடவுக்கு மானியம்: விழுப்புரம் ஆட்சியா் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு உற்பத்தி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கரும்பு நடவு மானியம் வழங்கப்படவுள்ளது என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க