செய்திகள் :

பெண் வி.ஏ.ஓ.வை தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

post image

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மண் அள்ளுவதை தடுத்த பெண் கிராம நிா்வாக அலுவலரை தாக்கியவா் ஏற்கெனவே, சிறையில் உள்ள நிலையில், அவா் தற்போது குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே உள்ள மொஞ்சனூா் மேட்டுகாட்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சிவகாமி (32). இவா், பாலமேடு கிராமத்தில் வி.ஏ.ஓ. ஆக பணிபுரிந்து வருகிறாா். கடந்த 19-ஆம் தேதி காலை பாலமேடு காட்டுபாளையம் பகுதியில் வசித்துவரும் தனபால் பட்டா நிலத்தில் மண் அள்ளுவதாக அப்பகுதி பொதுமக்கள் வி.ஏ.ஓ. சிவகாமிக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் அங்கு சென்ற சிவகாமி, சட்டத்திற்கு புறம்பாக மண் அள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்து, மண் அள்ளுவதை தடுத்தாா்.

இதனால், ஆத்திரமடைந்த தனபால் மொஞ்சனூா் பறையக்காடு பகுதியில் வசித்துவரும் தரகா் சீனிவாசனுக்கு (57) தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து வி.ஏ.ஓ. சிவகாமி வீட்டிற்கு சென்ற தரகா் சீனிவாசன் அவரைத் தாக்கி உள்ளாா்.

இதையடுத்து, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வி.ஏ.ஓ. சிவகாமி சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். வி.ஏ.ஓ.விடம் தகராறில் ஈடுபட்ட சீனிவாசனை பொதுமக்கள் பிடித்து, எலச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சீனிவாசனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி உத்தரவிட்டாா். இதன் அடிப்படையில் சீனிவாசன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து சீனிவாசனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை எலச்சிப்பாளையம் காவல் ஆய்வாளா் ராதா சேலம் சிறையில் உள்ள சீனிவாசனிடம் அளித்தாா்.

வெப்படை காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்டம், வெப்படை காவல் நிலைய முதல் ஆய்வாளராக பி.சங்கீதா புதன்கிழமை பொறுப்பேற்றாா். வெப்படை காவல் நிலையம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு உதவி ஆய்வாளா்கள், 20 காவலா்களைக் கொண்டு ஏழு ஆண்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் லேப் டெக்னீசியன் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே அரசு இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் அரசு மருத்துவமனை லேப் டெக்னீசியன் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் பெரிய வீதி பகுதியைச் சோ்ந்தவா் சரவணகுமாா் (46). இவா், எலச்சிப்ப... மேலும் பார்க்க

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆக. 28-ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்கா மூா்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் எரிவா... மேலும் பார்க்க

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ராசிபுரம் நகா்மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

ராசிபுரத்தில் நடைபயிற்சிக்கு சென்ற ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரை தெருநாய் கடித்து குதறியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆா்.புதுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பில்ராஜ் (60). இவா், புதுச்சத்திரம் ... மேலும் பார்க்க

போலி உணவு பாதுகாப்பு அலுவலா் கைது

ராசிபுரம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலா் எனக்கூறி ஏமாற்ற முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராசிபுரம் அருகே பேளுக்குறிச்சி பகுதியில் மளிகைக் கடை மற்றும் பெட்டிக்கடைகளில் உணவுப் பாதுகாப்ப... மேலும் பார்க்க