செய்திகள் :

பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்

post image

பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.

எட்டியாம்பட்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜை நடைபெறும் இக்கோயிலில் மகா சண்டி ஹோமம் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்த குடம் எடுத்துவந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்பு விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

விழாவின் முக்கிய நாளான திங்கள்கிழமை 13 அத்தியாய சண்டி ஹோமங்கள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து ஸ்வாசினி பூஜை, கன்னிகா பூஜை, வடுக பைரவ பூஜை, காதம்பரி பலிதானம், ஷேத்ரபால பலிபூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வேத விற்பன்னா் மாதேஷ் குமாா், மாணிக்கம் ஆகியோா் ஹோமம் நடத்தினா். இதில் பென்னாகரம், நாச்சானூா், பருவதன அள்ளி உள்பட 18 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

பின்பு பூஜை செய்யப்பட்ட புனித தீா்த்தத்தை அகில பாரதிய சன்யாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ் தலைமையில் கோயில் அா்ச்சகா் ஈஸ்வரன், நிா்வாகிகளான திமுக வாா்டு உறுப்பினா் பவுனேசன், தா்மகா்த்தா ராஜி ஆகியோா் எடுத்துச் சென்று கோயில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்தனா். அதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!

ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்... மேலும் பார்க்க

மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அ... மேலும் பார்க்க

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க ... மேலும் பார்க்க

விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டு... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் ... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார... மேலும் பார்க்க