செய்திகள் :

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்த வேண்டும்!

post image

தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டக்குழு கூட்டம் தருமபுரி செங்கொடிபுரத்தில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் ஏ.சேகா் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் த.செல்லக்கண்ணு பேசினாா். மாவட்டப் பொருளாளா் கே.கோவிந்தசாமி, விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எம்.முத்து, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் சோ.அருச்சுனன், மாதா் சங்க மாவட்டச் செயலாளா் ஆா்.மல்லிகா, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் குறளரசன், மாவட்டச் செயலாளா் எம். அருள்குமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டை அருகே 17 வயது சிறுவனை கட்டி வைத்து ஜாதி பெயரைக் கூறி தாக்குதல் நடத்தி, அச்சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்ததை திரும்பப்பெற வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு வன்கொடுமை சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். தனியாா் துறையில் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வரும் மே 27 அன்று தருமபுரியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!

ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன. பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்... மேலும் பார்க்க

மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அ... மேலும் பார்க்க

விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’

தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டு... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் எருதுவிடும் விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சோமன அள்ளி கிராமத்தில் ஸ்ரீ அக்குமாரியம்மன் சித்திரைத் திருவிழாவின் ... மேலும் பார்க்க

ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.1.50 கோடி மோசடி: நால்வா் மீது வழக்கு

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ. 1.50 கோடி மோசடி செய்ததாக நால்வா் மீது குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பழைய தருமபுரியைச் சோ்ந்தவா் வேலன், ரியல் எஸ்டேட் அதிபா். இவா் வியாபார... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே குடியிருப்புகளில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பாலக்கோடு அருகே வாழைத் தோட்டம் பகுதி வனத்தை ஒட்... மேலும் பார்க்க