பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
மாரண்ட அள்ளியில் சாலை, குடிநீா் குழாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி, அம்பேத்கா் நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
மாரண்ட அள்ளியில் பேரூராட்சி செயல் அலுவலா் ஆயிஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்து, 15-ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பில் கழிவுநீா் வடிகால் கால்வாய் மற்றும் கான்கிரீட் சாலை, சின்னாற்றுப் படுகை தரைமட்ட தொட்டியில் இருந்து பேருந்து நிலையத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி வரை ரூ. 25 லட்சம் மதிப்பில் குடிநீா் குழாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தாா். இதில், தலைமை எழுத்தா் சம்பத், அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.