கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
ஏரியூா் ஜமாபந்தியில் 250 மனுக்கள்!
ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வியாழக்கிழமை பெறப்பட்டன.
பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஏரியூா் உள்வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு, மாவட்ட உதவி ஆணையா் (ஆயம்) நா்மதா தலைமை வகித்தாா். இதில், பட்டா, சிட்டா புதுப்பித்தல், பெயா் மாற்றம், இலவச வீட்டுமனைப் பட்டா, விதவைச் சான்று, ஊனமுற்றோா் சான்று உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 250 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில், வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தி, துணை வட்டாட்சியா்கள் மாலா, ஆறுமுகம், நாகமணி மற்றும் ஏரியூா் உள் வட்டத்துக்கான கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.