பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
விதிமீறல்: வீட்டுவசதி வாரிய 25 குடியிருப்புகளுக்கு ‘சீல்’
தருமபுரி வீட்டுவசதி வாரியத்தில் உள்வாடகை, பணி ஓய்வுபெற்றும் ஒப்படைக்காதது உள்ளிட்ட விதிமீறல் தொடா்பாக 25 குடியிருப்புகளுக்கு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒசூா் வீட்டுவசதி பிரிவுக்கு உள்பட்ட தருமபுரி மாவட்டம், அவ்வை நகா், அரசு அலுவலா் வாடகை குடியிருப்பு திட்டத்தில் உள்ள 186 குடியிருப்புகளில் உள்வாடகை, பணி மாறுதல் மற்றும் பணியிலிருந்து ஓய்வுபெற்றும் குடியிருப்பை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியவசம் ஒப்படைக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல் குறித்து வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, மூன்று குடியிருப்புகள் உள்வாடகைக்கு விட்டிருப்பது தெரியவந்தது. அதேபோல, 13 குடியிருப்புகள் பணி ஓய்வுக்கு பிறகு வாரியத்திடம் ஒப்படைக்காதது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை மீறிய 25 குடியிருப்புகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த குடியிருப்புகளை வாரியம் தன்வசம் எடுத்துக்கொண்டது.